அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் தங்க வேலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக,தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
“அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் கோரிக்கைகளை ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் தீர்ப்போம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்த திமுக 300 நாட்களைக் கடந்த பின்னரும் கண்டு கொள்ளவில்லை.அதிருப்தியில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புகளும் போராட்டத்தில் இறங்கின.திமுகவின் சொந்த தொழிற்சங்கமான ‘தொழிலாளர் முன்னேற்ற சங்கமும்’ திமுக அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உறுதி செய்தல், 2003-ஆம் ஆண்டிற்குப் பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களைப் பழைய ஓய்வூதிய திட்டத்தில் இணைத்தல், பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு இன்னமும் ஓய்வூதியப் பலன்கள் எதுவும் வழங்கப்படாமல் இருப்பது, பஞ்சப்படி உள்ளிட்ட 19 கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராடி வருகிறார்கள்.
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது இந்தப் போராட்டங்களை ஆதரித்ததுடன் ஆட்சிக்கு வந்த உடனேயே இந்தப் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்து தீர்க்கப்படும் என்றும் தெரிவித்தது. பொய்யான வாக்குறுதிகளை அளித்து தங்கள் வாக்குகளை அறுவடை செய்திருப்பதாகத் தமிழக மக்களைப் போலவே போக்குவரத்துக் கழகப் பணியாளர்களும் உணர்கிறார்கள் என்பதே வேதனையான உண்மை.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது தொழிலாளர்களுக்கு ஆதரவாக பேசுவதும்,ஆளுங்கட்சியான பின் சென்ற அதிமுக அரசு எடுத்த அதே நிலைப்பாட்டை தொடர்வதும் என்பது திமுக அளித்த தேர்தல் அறிக்கைகளை மீண்டும் மீண்டும் கேள்விக்குள்ளாக்குகிறது. போக்குவரத்துக்கழக ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது”,என்று தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…