மீண்டும் செப்.26 ……திமுகவின் ‘தி ரைசிங் சன்’ நாளிதழ் வெளியீடு..!
திமுகவின் அதிகாரப்பூர்வ ஆங்கில நாளேடான ‘தி ரைசிங் சன்‘ செப்டம்பர் 26 ஆம் தேதி மாலை வெளியிடப்படவுள்ளது.
திமுகவின் அதிகாரப்பூர்வ ஆங்கில வார இதழான தி ரைசிங் சன்,1971ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நிறுத்தப்பட்டது.அதன்பின்னர், 2005ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டு பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில்,திமுகவின் அதிகாரப்பூர்வ ஆங்கில நாளேடு ‘தி ரைசிங் சன்‘ செப்டம்பர் 26 ஆம் தேதி மாலை வெளியிடப்படவுள்ளது.இதனை,அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் நிகழ்வில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.
‘மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், இந்தியாவுக்கே வழிகாட்டும் திமுகவின் கொள்கைகளையும் – செய்திகளையும் உலகம் முழுவதும் கொண்டு செல்ல இருக்கும் ‘THE RISING SUN’ ஆங்கில இதழை செப்டம்பர் 26 ஆம் தேதி மாலை 4 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் வெளியிடுகிறார்’#CMMKStalin #DMK pic.twitter.com/hplOzUvg7m
— DMK (@arivalayam) September 23, 2021