மாநிலங்களவை தேர்தலுக்காக தாக்கல் செய்த வேட்புமனுவை வாபஸ் பெற்றார் திமுகவின் என்.ஆர் இளங்கோ
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வழக்கறிஞர் வில்சன் ,தொ.மு.ச சண்முகம் மற்றும் திமுக போட்டியிடும் மூன்று தொகுதிகளில் ஒரு தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில் மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுகிறார்.மூவரும் வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டனர்.
வைகோ மீது தேசத்துரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ 10,000 அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் வைகோவின் வேட்புமனு ஏற்க்கப்படுமா ? என்ற கேள்வி எழுந்து வந்தது.இதனால் திமுக சார்பில் 3 ஆவது வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார், என்.ஆர்.இளங்கோ.ஆனால் வேட்புமனு மீதான பரிசீலனையில் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டது.
இந்நிலையில் மாநிலங்களவை தேர்தலுக்காக தாக்கல் செய்த வேட்புமனுவை வாபஸ் பெற்றார் திமுகவின் என்.ஆர் இளங்கோ. மாநிலங்களவை தேர்தலில் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டதால் தனது மனுவை திரும்ப பெற்றார் திமுகவின் என்.ஆர்.இளங்கோ
ரஷ்யா-உக்ரைன் போர் என்பது தொடர்ச்சியாக நடந்து வருவதால் இன்னும் அங்கு ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவு வருகிறது. அமெரிக்க அதிபராக…
வாஷிங்டன் : பிரதமர் நரேந்திர மோடி கடந்த 3 நாட்களாக பிரான்ஸ் நாட்டில் மேற்கொண்டிருந்த சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது அமெரிக்காவில்…
சென்னை : விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள் வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த…
சென்னை : கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து கொண்டு வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற…
ஜம்மு : ஜம்மு & காஷ்மீர் எல்லையில் கடந்த சில நாட்களாக பதற்றம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான் மீண்டும்…
சென்னை : பாரிஸ் AI உச்சி மாநாடு உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு, பிரான்ஸ் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர்…