திமுகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு…!
திமுகவின் புதிய நிர்வாகிகள் பட்டியலை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு, திமுகவின் 15-வது உட்கட்சி தேர்தல் தொடங்கியது, இந்த தேர்தல் கொரோனா காரணமாக இந்த ஆண்டு வரை நடைபெற்று வந்தது. அதன்படி, செப்டம்பர் 22 முதல் 25ஆம் தேதி வரை மாவட்ட அவைத் தலைவர், செயலாளர், 3 துணைச் செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு நேற்று திமுக மாவட்டச் செயலாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, திமுகவின் 72 மாவட்டங்களில் 71 மாவட்டங்களின் நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தென்காசி வடக்கு மாவட்டத்தின் செயலாளர் பெயர் மட்டும் அறிவிக்கப்படாமல் உள்ளது. இந்த பட்டியலை, கட்சியின் பொது செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அவர்கள் வெளியிட்டுள்ளார்.