திமுகவின் ஊராட்சி சபை கூட்டம் நடத்தும் தேதி மாற்றம்…!
ஜனவரி 2-ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ளதால் திமுக சார்பிலான ஊராட்சி சபை கூட்டம் நடத்தும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நடைபெற்றது.
அதேபோல் திமுகவில் புதிதாக சேர்ந்துள்ள செந்தில் பாலாஜி சிறப்பு அழைப்பாளராக கூட்டத்தில் பங்கேற்றார்.
இதன் பின்னர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறுகையில், மக்களிடம் செல்வோம், சொல்வோம், மக்கள் மனங்களை வெல்வோம் என்ற முழக்கத்தை அடிப்படையாக வைத்து ஜனவரி முதல் ஊராட்சி பகுதிகளில் திமுக பயணம் மேற்கொள்ளும்.மக்களின் மனங்களை வெல்வோம் என்ற முழக்கத்தை முன்னிறுத்தி வரும் ஜனவரி 3-ம் தேதியில் இருந்து பயணம் தொடங்கி 12617 ஊராட்சிகளுக்கும் செல்லவிருக்கிறோம் என்று தெரிவித்தார்.
பின் திமுக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு, மேகதாது அணை தொடர்பாக கர்நாடகாவுக்கு, மத்திய அரசு அளித்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.கஜா புயல் பாதித்த மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், அந்த பகுதி மக்களின் விவசாய கடன் மற்றும் கல்விக் கடனை ரத்து செய்ய வலியுறுத்தியும் திமுக கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் திமுக தலைமை தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் ஜனவரி 2-ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ளதால் திமுக சார்பிலான ஊராட்சி சபை கூட்டம் நடத்தும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது .திமுக நடத்தும் ஊராட்சி சபை கூட்டம் ஜனவரி 8 ஆம் தேதி முதல் பிப்ரவரி 17 ஆம் தேதி வரை நடைபெறும் என்று திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.