திமுகவின் எண்ணம் உள்ளாட்சித்தேர்தலை தள்ளிவைப்பது தான் – அமைச்சர் ஜெயக்குமார்
- தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
- திமுகவின் எண்ணம் உள்ளாட்சித்தேர்தலை தள்ளிவைப்பது தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் தேர்தலை நடத்த உத்தரவு பிறப்பித்தது.இதனால் தேர்தல் ஆணையம் புதிய அறிப்பாணையை வெளியிட்டது.அதன்படி தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது என்று அறிவித்தது.
இந்த நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், குடியுரிமை சட்டம் குறித்து பேச உரிமையில்லை. குடியுரிமை சட்டம் குறித்து பேச திமுகவிற்கு உரிமையில்லை.2 லட்சம் இலங்கை தமிழர்கள் அகதியானதற்கு திமுக தான் காரணம்.
சட்டமன்ற தேர்தலைக்கூட திமுக சந்திக்குமா என்ற சந்தேகம் அதிகம் உள்ளது.திமுகவின் எண்ணம் மக்களை சந்திக்காமல் உள்ளாட்சித்தேர்தலை தள்ளிவைப்பதே ஆகும் என்று தெரிவித்துள்ளார்.