திருச்சி சிறுகனூரில் இன்று திமுக சார்பில் ‘விடியலுக்கான முழக்கம்’ பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.இந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தமிழகத்திற்கான 10 ஆண்டுகள் தொலைநோக்கு திட்டத்தை அறிவிக்கிறார்.
திமுகவின் 14 வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெறுகிறது என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் மாநில மாநாடு பொதுக்கூட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த பொதுக்கூட்டத்திற்காக பிரம்மாண்டமாக சுமார் 750 ஏக்கரில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.இதில் 400 ஏக்கர் வாகனம் நிறுத்தவும், 350 ஏக்கர் பொதுக்கூட்டம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சுமார் 2.5 லட்சம் தொண்டர்கள் அமர இருக்கைகள் போடப்பட்டுள்ளது.
மூன்று பிரம்மாண்ட மேடைகள் அருகருகே அமைக்கப்பட்டுள்ளது.இதில் ஒரு மேடையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றவும் நடந்து சென்று தொண்டர்களிடம் பேசவும் நீண்ட நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது.மற்ற இரு மேடைகளில் கட்சியின் தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அமரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
திமுக மற்றும் காங்கிரஸ் க்கு இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை சற்றுமுன் முடிந்த நிலையில் 11 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வரும் மு.க.ஸ்டாலின் 1 மணிக்கு மாநாடு நுழைவாயிலில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைக்கிறார்.
அதன் பின்பு மாலையில் 5 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வரும் ஸ்டாலின் ‘விடியலுக்கான முழக்கம்’ உறுதிமொழிகள் குறித்தும் தொலைநோக்கு திட்டங்கள் குறித்தும் அறிவிக்கிறார்
இதில் பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி ஆகிய துறைகளின் தற்போதைய நிலைமை குறித்து திமுகவின் மாநில நிர்வாகிகள் மற்றும் கட்சி சாராத, பொருளாதார வல்லுநர்கள் கலந்துகொண்டு வெவ்வேறு தலைப்புகளில் பேசவுள்ளனர்.
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தன் தாய்க்கு முறையாகச் சிகிச்சை…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…
சென்னை : கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய…
சென்னை : சென்னையில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள்…
சென்னை : வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் எதிரொலியாக, மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிண்டி அரசு மருத்துவமனையில்…