முரசொலி தொடர்பான வழக்கில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அசுரன் படத்தை பார்த்துவிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பஞ்சமி நிலம் குறித்து கருத்து கூறியிருந்தார்.இதனையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்று தெரிவித்தார்.இதனைத்தொடர்ந்து முதல் பஞ்சமி நிலம் குறித்த விவாதம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
எனவே முரசொலி இடம் பஞ்சமி நிலம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் , பாஜகவின் சீனிவாசனும் கூறியதை எதிர்த்து எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் ஆவணங்களை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்தார்.இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் ,மார்ச் மாதம் 20-ஆம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாஜகவை சேர்ந்த சீனிவாசன் நேரில் ஆஜராகுமாறு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : காலையில் குறைந்த தங்கத்தின் விலை மதியம் உயர்ந்துள்ளது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் 3…
சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், மூன்றாவது மொழி ஏதேனும் என குறிப்பிட்டு மத்திய…
சென்னை : தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி உள்ள நிலையில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக…
சென்னை : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்காவில் இருந்து அவர்கள் சொந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் விரைவில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடைவிதிக்க…
சென்னை : மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கையின் படி பள்ளி குழந்தைகள் தாய் மொழி, ஆங்கிலம் தவிர்த்து…