திமுக தொடர்ந்த வழக்கு -ராமதாஸ் நேரில் ஆஜராக உத்தரவு

முரசொலி தொடர்பான வழக்கில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அசுரன் படத்தை பார்த்துவிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பஞ்சமி நிலம் குறித்து கருத்து கூறியிருந்தார்.இதனையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்று தெரிவித்தார்.இதனைத்தொடர்ந்து முதல் பஞ்சமி நிலம் குறித்த விவாதம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
எனவே முரசொலி இடம் பஞ்சமி நிலம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் , பாஜகவின் சீனிவாசனும் கூறியதை எதிர்த்து எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் ஆவணங்களை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்தார்.இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் ,மார்ச் மாதம் 20-ஆம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாஜகவை சேர்ந்த சீனிவாசன் நேரில் ஆஜராகுமாறு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தேன் கூட்டில் கை வைக்காதீர்கள்., மொழியால் பிரிந்த நாடுகள் இங்கு இருக்கிறது! மு.க.ஸ்டாலின் பரபரப்பு கடிதம்!
March 6, 2025
“ராஜ்யசபா சீட் ஓகே., கமலுக்கு வாழ்த்துக்கள்! முதலமைச்சர் பொய் சொல்கிறார்!” அண்ணாமலை கடும் விமர்சனம்!
March 6, 2025
SA vs NZ : இறுதிவரை போராடிய தென் ஆப்பிரிக்கா! இறுதி போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து!
March 5, 2025