திமுகவின் கனவு பட்ஜெட், கானல் நீர் பட்ஜெட்டாக உள்ளது – இபிஎஸ் விமர்சனம்

EDAPPADI PALANISWAMI (1)

தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்தார். காலை 10 மணிக்கு ஆரம்பித்து இந்த கூட்டத்தொடர் 12:30 மணியளவில் நிறைவு பெற்றது. இதனை அடுத்து அரசியல் கட்சியினர் பட்ஜெட் குறித்த தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

அந்தவகையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பட்ஜெட் குறித்து செஇதயலர் சந்திப்பில் பல்வேறு கருத்துகளை கூறி விமர்சனத்தை முன்வைத்தார். அதன்படி அவர் கூறியதாவது, இந்த பட்ஜெட் மக்களின் வளர்ச்சிக்கான திட்டங்கள் எதுவும் இல்லாத பட்ஜெட்.

ஆண்டுதோறும் குறிப்பிட்டு அளவில் தடுப்பணைகள் கட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால், தற்போது அது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. பட்ஜெட் அறிக்கையில் ஒவ்வொரு துறைக்கும் குறிப்பிட்ட தொகை ஆண்டுதோறும் ஒதுக்கப்படும், அவ்வாறுதான் தற்போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ஒவ்வொரு துறைக்கும் குறிப்பிட்ட தொகையை துறை வளர்ச்சிக்காக ஒதுக்கி உள்ளனர்.

பத்தாயிரம் மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்படும்.. ரூ.35,000 கோடி ஒதுக்கீடு!

தமிழகத்தின் கடன் தொகையானது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. தற்போது 8.33 லட்சம் கோடி கடன் ஆக தமிழகத்தின் கடன் உயர்ந்து உள்ளது. தமிழகத்தை கடனாளி மாநிலமாக மாற்றிவிட்டார்கள் என்று முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். அதனை சரி செய்ய கடன் மேலாண்மை குழுவை அமைப்போம் என்றும் கூறினார். ஆனா,ல் தற்போது அப்படியான குழு இன்னும் அமைக்கப்படவில்லை.

பட்ஜெட் குறித்த முழு தகவலையும் எங்களுக்கு கொடுக்கவில்லை. இந்த பட்ஜெட் பற்றி கூற வேண்டுமென்றால், திமுகவின் கனவு பட்ஜெட், கானல் நீர் பட்ஜெட்டாக உள்ளது. அதாவது, இது கனவு பட்ஜெட், கானல் நீர் பட்ஜெட் எதற்கும் பலன் இல்லாத பட்ஜெட் என்று கூற வேண்டும் என விமர்சித்தார். இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது. திமுக ஆட்சி வந்ததில் இருந்தே நிதி பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

நம்பர் ஒன் நம்பர் ஒன் என்று கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் நம்பர் ஒன் என்றால் கடன் வாங்குவதில் தமிழகம் நம்பர் ஒன் என்பதை நிதி அமைச்சர் கூற மறுத்துவிட்டார். அதிமுக ஆட்சியை விட தற்போது அதிக வருமான வருகிறது. ஆனாலும், எந்தவித பெரிய திட்டமும், புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் மடிக்கணினி, சைக்கிள், மாவட்டம் தோறும் பள்ளி, மருத்துவமனைகள் என பல்வேறு புதிய திட்டங்களை கொண்டு வந்தோம். ஆனால் இன்றைய பட்ஜெட்டில் எந்தவித புதிய திட்டமும் இல்லை என்று குற்றசாட்டினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்