ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் எரிச்சல் அடைந்து விமர்சித்து வருகிறார்.! அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்.!
மத்திய அரசு அளவில் திமுகவின் திராவிட மாடல் ஆட்சி கொடிகட்டி பறக்கிறது. – அமைச்சர் சேகர் பாபு கருத்து.
தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவந்தராஜன் தமிழகத்தில் ஆளும் திமுக ஆட்சி மற்றும் , திமுக கூறும் திராவிட மாடல் ஆட்சி ஆகியவற்றை விமர்சித்து கருத்து கூறிவந்தார்.
இந்த கருத்துக்கு எதிராக, தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், மத்திய அரசு அளவில் திமுகவின் திராவிட மாடல் ஆட்சி கொடிகட்டி பறக்கிறது. இதனால் தமிழிசை சவுந்தராஜன் எரிச்சல் அடைந்துள்ளார் . அதனால் தான் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை விமர்சித்து வருகிறார். இது திராவிட மாடலுக்கு கிடைத்த வெற்றி தான் எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.