ஈபிஎஸ்-க்கு எதிராக திமுக மான நஷ்ட ஈடு வழக்கு!
DMK : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு எதிராக ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கோரி திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக கூறி எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து திமுக அரசை விமர்சித்து வருகிறார்.
Read More – தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் செய்தி.. 4000 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!
திமுக ஆட்சியில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசி வருகிறார். அதுவும், திமுகவின் முன்னாள் பிரமுகர் ஜாபர் சாதிக் போதைப்பொருல் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டது அடுத்து, இபிஎஸ் கடுமையாக விமர்சத்தார்.
Read More – பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்.? புதிய சிக்கலில் அமைச்சர் தா.மோ.அன்பரசன்.!
இந்த சுழலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Read More – மதுரை மக்களே ரெடியா.? சித்திரை திருவிழா முக்கிய தேதிகள் அப்டேட்ஸ்…
போதைப்பொருள் தடுப்பு விவகாரத்தில் தவறான தகவல்களை எடப்பாடி பழனிசாமி கூறி வருவதாகவும், போதைப் பொருள் பறிமுதல், ஜாபர் சாதிக் கைது தொடர்பான சமீப நிகழ்வுகளில் திமுகவை தொடர்புப்படுத்தி பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.