“திமுகவின் பரப்புரைப் பயணம் தடை கடந்து தொடரும்!”- தீர்மானம் நிறைவேற்றம்

Default Image
இன்று  நடைபெற்ற உயர்நிலைச் செயல்திட்ட குழுக்கூட்டத்தில்,திமுகவின் பரப்புரைப் பயணம் தடை கடந்து தொடரும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது .சென்னை – அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்,நடைபெறும் உயர்நிலை செயல்திட்ட குழுக்கூட்டத்தில் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இன்று நடைபெற்ற உயர்நிலைச் செயல்திட்ட குழுக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநிலம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழக முன்னணியினர் இருபது பேர் பங்கேற்கும் “விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” என்ற பரப்புரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அந்தப் பிரச்சாரப் பயணத்தை முதற்கட்டமாக 20.11.2020 அன்று தொடங்கிய உதயநிதி உள்ளிட்ட கழக நிர்வாகிகளைத் தொடர்ந்து நடத்த விடாமல் தடுப்பதற்கும், கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து கைது செய்து, நீண்ட நேரம், இரவு வரை காவல்துறைக் கட்டுப்பாட்டில் வைக்கும் அ.தி.மு.க. அரசின் ஜனநாயக விரோதப் போக்குக்கும் இந்த உயர்நிலைச் செயல்திட்டக் குழுக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
மக்களாட்சியில், ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தேர்தல் பிரச்சாரம் செய்யும் உரிமை உண்டு. ஆகவே, எத்தனை தடைகள் வந்தாலும், அவற்றை உடைத்தெறிந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பரப்புரைப் பயணம், தன்னெழுச்சியான பொது மக்களின் பேராதரவுடன், தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்