தமிழ் வழியில் படிக்கும் திமுக நிர்வாகிகளின் பிள்ளைகள் பட்டியலை வெளியிட வேண்டும் என வானதி சீனிவாசன் பேச்சு.
இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தின் மீது உரையாற்றிய முதலமைச்சர், குடியரசு தலைவருக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற அளித்த அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகள் வைக்கப்பட்டுள்ளன. இது இந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும். தமிழினத்தை தமிழரை பண்பாட்டை காக்கும் போராட்டமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறோம். ஒரே நாடு ஒரே மொழி என்ற பெயரில் பிற தேசிய மொழிகளை அளிக்க முயற்சி நடக்கிறது.
முழுக்க முழுக்க இந்திக்காகவே துடிக்கிறது மத்திய அரசின் இதயம். ஆட்சிக்கு வந்ததே இந்தியை திணிக்க தான். இந்தி மொழி பேசாத மாநில மக்களின் உரிமைகள் நிலை நாட்டப்பட வேண்டும். அனைத்து மொழிகளும் அலுவல் மொழியாக்க வேண்டும் என தெரிவித்தார். இதன்பின், முதலமைச்சர் முன்மொழிந்த இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்துக்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனிடையே, பேரவையில் பேசிய பாஜகவின் நயினார் நாகேந்திரன், தாய்க்கு பழிநேர்ந்தால் மகனுக்கும், அன்னை தமிழுக்கு பழி நேர்ந்தால் நாம் அனைவருக்குமானது.
நிச்சயமாக இந்தி திணிப்பு இருக்குமேயானால் தமிழகத்தில் பாஜக கட்சி அதனை வன்மையாக கண்டிக்கும். ஆனால், பிரதமர் மோடி ஐநா சபைக்கு சென்றாலும் சரி, அயோத்திக்கு சென்றாலும் சரி திருக்குறளையும், தமிழ் வளர்த்த புலவர்களையும் பேசுவார். பனாரஸ் பல்கலைக்கழகத்தில் தமிழுக்காக தனி இருக்கையை வாங்கி தந்தவர் பிரதமர் மோடி. இதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது. தமிழக முதல் அமைச்சர் கொண்டு வந்த இந்த தீர்மானம் சி பிரிவு மாநிலங்களில் அதாவது இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழி திணிக்கப்படுவதாக கூறப்படுவது எப்படி என்பது தெரியவில்லை. இதனால் இந்தி எதிர்ப்பு தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் வெளிநடப்பு செய்வதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், திமுகவின் இந்தி எதிர்ப்பு நாடகம் இனி எடுபடாது என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், திமுகவினர் நடத்தும் இந்தி பாடம் உள்ள பள்ளிகள், தமிழ் வழியில் படிக்கும் திமுக நிர்வாகிகளின் பிள்ளைகள் பட்டியலை வெளியிட வேண்டும் என தெரிவித்த அவர், மாநில மொழிகளுக்கு மாற்றாக இந்தியை கற்க வேண்டும். இந்தியில் அலுவல்கள் நடக்க வேண்டும் என பாஜக கூறவில்லை எனவும் கூறியுள்ளார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…