திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் வெளிநடப்பு செய்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில் இந்தாண்டின் (2023) முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. அதில் ‘வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும்.’ என தமிழில் தனது உரையை தொடங்கினார் ஆளுநர் ரவி. இந்திய அளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் கீழ் தமிழகம் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அரிசி, சர்க்கரை, கரும்பு கொடுப்பதன் மூலம் தமிழக அரசு 2,429 கோடி ரூபாய்க்கு பொங்கல் பரிசுக்காக ஒதுக்கியுள்ளது என குறிப்பிட்டார்.
ஆளுநரை ரவி சட்டப்பேரவையில் தனது உரையை தொடங்கும் போதே திமுக கூட்டணி கட்சிகள் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்ட தொடங்கி விட்டனர். தொடர்ந்து திமுக கூட்டணி கட்சியினர் எங்கள் நாடு தமிழ்நாடு என முழக்கமிட ஆரம்பித்து விட்டனர்.
பின்னர் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் வெளிநடப்பு செய்துள்ளனர். இதனால் இந்தாண்டு முதல் சட்டப்பேரவையே மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது.
சென்னை :கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; உளுந்து…
சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு…
டெல்லி : மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம், அலவன்ஸ், ஓய்வூதியம் உள்ளிட்ட மற்ற சலுகைகள் தொடர்பான முடிவுகள் பற்றி ஆய்வு…
சென்னை : நம்ம பிரமாண்ட இயக்குநர் ஷங்கருக்கு என்னதான் ஆச்சு? என்கிற வகையில், தொடர்ச்சியாக அவர் இயக்கும் படங்கள் தோல்வி அடைந்து…
சென்னை : தைப்பொங்கல் நாளின் மறுநாள் மாட்டுப்பொங்கல் பண்டிகை தமிழர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறது. இந்த நாளில் உழவர்களின் நண்பனாக திகழும்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரம்…