ஜனவரி 21ல் திமுக இளைஞரணி மாநாடு – கட்சி தலைமை அறிவிப்பு

திமுக இளைஞரணியின் மாநில மாநாடு வரும் 21ம் தேதி நடைபெறும் என கட்சி தலைமை அறிவித்துள்ளது. ‘மிக்ஜாம்’ புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு, ஜனவரி 21-ம் தேதி சேலத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சேலத்தில் டிச. 17ம் தேதி திமுக இளைஞரணி 2வது மாநாடு நடைபெறும் என திமுக அறிவித்திருந்தது. கடந்த 2007, டிச. 15ல் திமுக இளைஞரணியின் முதல் மாநாடு நடைபெற்ற நிலையில், தற்போது 16 ஆண்டுகளுக்கு பிறகு திமுக இளைஞரணியின் 2வது மாநாடு சேலத்தில் டிச.17ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மிக கனமழை!! தமிழ்நாட்டில் நாளை ஆரஞ்சு அலர்ட்! எங்கெல்லாம் தெரியுமா?
திமுக இளைஞரணி தலைவராக தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு வகித்து வருகிறார். அவரது தலைமையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இந்த சூழல் திமுக இளைஞரணி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் ‘மிக்ஜாம்’ புயல், கனமழை வெள்ளம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதன்காரணமாக திமுக இளைஞரணி 2வது மாநாடு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை மழை பொழிந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், இரண்டாவது முறையாக மாநாடு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது, திமுக இளைஞரணியின் மாநில மாநாடு வரும் 21ம் தேதி நடைபெறும் என கட்சி தலைமை அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
நேபாளத்தில் இன்று அதிகாலையில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. பீகாரிலும் லேசான அதிர்வு.!
February 28, 2025
தமிழ்நாடு வெல்லும்: “இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா?” – முதல்வர் ஸ்டாலின் .!
February 28, 2025
சீமான் வீட்டு காவலாளிகளுக்கு மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
February 28, 2025
தமிழ்நாட்டின் இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை மையம்!
February 28, 2025