திமுக இளைஞரணி மாநாடு – முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு.!
திமுக கட்சியின் இளைஞரணி மாநாடு வரும் ஜனவரி 21ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. இதற்கான விழா ஏற்பாடுகள் வெகு தீவிரமாக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு நிகழ்வுகள் முந்தைய நாள் ஜனவரி 20ஆம் தேதி அன்று முதலே துவங்குகிறது.
கடந்த 2007, டிச. 15ல் திமுக இளைஞரணியின் முதல் மாநாடு நடைபெற்ற நிலையில், தற்போது 16 ஆண்டுகளுக்கு பிறகு திமுக இளைஞரணியின் 2வது மாநாடு சேலத்தில் டிச.17ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
திமுக இளைஞரணி தலைவராக தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு வகித்து வருகிறார். அவரது தலைமையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. தற்பொழுது, மாநாட்டிற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சேலம் மாநாடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், “மாநில உரிமைகளை வென்றெடுப்பதுதான் மாநாட்டின் நோக்கம், சேலத்தில் எனது கண்கள் உங்களது முகங்களைத்தான் தேடும். சேலம் செல்ல நான் தயாராகிவிட்டேன், நீங்கள்? “என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு அழைப்பு விடுத்துள்ளார்.
எனது உடன்பிறப்புகளே!
கழக உடன்பிறப்புகளே!
கலைஞரின் உடன்பிறப்புகளே!வரும் ஞாயிறு அன்று (ஜனவரி 21), சேலத்தில் எனது கண்கள் உங்களது முகங்களைத்தான் தேடும்!https://t.co/DDFVVSX3cf#LetterToBrethren@dmk_youthwing @Udhaystalin pic.twitter.com/QRT59c1q4x
— M.K.Stalin (@mkstalin) January 18, 2024