திமுக மகளிர் உரிமை மாநாடு தொடங்கியது..! அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம்..!
திமுக மகளிர் அணி சார்பில் இன்று சென்னையில் மகளிர் உரிமை மாநாடு நடைபெறும் என்று தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி அறிவித்திருந்தார்.
இதுதொடர்பாக எம்.பி. கனிமொழி வெளியிட்டிருந்த அறிக்கையில், அனைத்து துறைகளிலும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பெண்ணுரிமைக்காகவும் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் மகத்தான பணிகளை ஆற்றியுள்ளார். தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் வாயிலாக, பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை அடுத்தடுத்துச் செயல்படுத்தி வருகிறார்.
எனவே, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனே அமல்படுத்துவது உள்ளிட்ட பெண்ணுரிமை தொடர்பான கருத்துரையாடலை முன்னெடுப்பதை காலத்தின் தேவையாகக் கருதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மகளிர் அணி சார்பில் இன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் ‘மகளிர் உரிமை மாநாடு’ பிரமாண்டமாக தொடங்கியுள்ளது.
திமுகவின் மகளிர் உரிமை மாநாடு தேர்தல் ஆதாயத்திற்காக நடத்தப்படும் நாடகம் – வானதி சீனிவாசன்!
இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி உள்ளிட்ட பல்வேறு பெண் தலைவர்கள் கலந்துகொண்டுகொண்டுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பெண் தலைவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கவுரவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் மற்றும் பெண்கள் அலைகடலனே திரண்டுள்ளனர்.