பேராவூரணியில் திமுக வெற்றி..!
பேராவூரணி தொகுதியில் திமுக வேட்பாளர் என். அசோக்குமார் வெற்றி பெற்றார்.
தமிழகத்தில் இன்று காலை முதல் வாக்கு எண்ணப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, பல இடங்களில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், பேராவூரணி தொகுதியில் அதிமுக சார்பில் எஸ்.வி. திருஞானசம்பந்தமும், திமுக சார்பில் என். அசோக்குமாரும் போட்டியிட்டனர்.
அதிமுக வேட்பாளர் எஸ்.வி. திருஞானசம்பந்தத்தை விட 23,000 வாக்குகள் அதிகம் பெற்று என். அசோக்குமார் வெற்றி பெற்றார்.