தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும்-ஸ்டாலின்
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை நடைபெற்ற விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.அப்பொழுது அவர் பேசுகையில்,தமிழ் மொழியையும் இனத்தையும் அழிக்க ஒரு சிலர் திட்டமிட்டுள்ளனர். தமிழ்மொழிக்காக போராடும் இயக்கமாக திமுக விளங்குகிறது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும்.திராவிட இயக்கம் என்ன செய்தது என்று கேட்கிறார்கள், தமிழக கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆனதற்கு காரணமே திராவிட இயக்கம் தான் என்று பேசினார்.