உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனு விநியோக அவகாசத்தை நீட்டித்துள்ளது திமுக.
உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற டிசம்பர் மாதம் நடைபெறும் என்று தகவல் வெளியாகி வருகிறது.இதற்கு ஏற்ற வகையில் கட்சிகள் அனைத்தும் விருப்பமனு பெரும் தேதியை அறிவித்து வருகின்றது.
இதனை தொடர்ந்து திமுகவும் விருப்பமனுவை பெற்றுக்கொள்ள தேதியை அறிவித்தது.அதன்படி நவம்பர் 14 -ஆம் தேதி காலை 10 மணி முதல் வருகின்ற 20 ஆம் தேதி வரை விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதனை மாவட்ட அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனு விநியோக அவகாசத்தை நீட்டித்துள்ளது திமுக.இது தொடர்பாக திமுக [பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,மாவட்ட கழக செயலாளர்கள் கால அவகாசம் நீடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்ததன் அடிப்படையில் வருகின்ற 27-ஆம் தேதி வரை விருப்பமனுவிற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் விருப்ப மனு விநியோகம் நிறைவடைய இருந்த நிலையில் வரும் 27-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…
உத்தரப்பிரதேசம் : ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், பச்சிளம்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…