வரும் 20-ஆம் தேதி மத்திய அரசுக்கு எதிராக நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் தி.க பங்கேற்கும் – கி.வீரமணி
வரும் 20-ஆம் தேதி மத்திய அரசுக்கு எதிராக நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் தி.க பங்கேற்கும் என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
மத்திய பா.ஜ.க. அரசின் செயல்களைக் கண்டித்து திமுக தலைமையிலான அனைத்து கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் மாநிலம் முழுவதும் வரும் 20ம் தேதி காலை 10 மணிக்கு தங்களின் இல்லம் முன்பு கருப்புக் கொடி ஏந்தி கண்டனப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிராக 20-ம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் திராவிட கழகம் பங்கேற்கும் என்று கி.வீரமணி கூறியுள்ளார். திராவிட கழகத்தினர் ஒருங்கிணைந்து போராடுவோம். மதச்சார்பற்ற ஜனநாயக உரிமையைப் பாதுகாப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.