மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முறையிட்டுள்ள பூரணசுந்தரிக்கு திமுக துணை நிற்கும் – மு.க. ஸ்டாலின்

Published by
Venu

பூரணசுந்தரிக்கு OBC & மாற்றுத்திறனாளி என்ற அடிப்படையில் IAS பணி வழங்காமல் IRS பணி வழங்கப்பட்டிருப்பது இடஒதுக்கீடு விதிகளுக்கே முரணானது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பார்வையற்ற மாற்றுத்திறனாளியான பூரணசுந்தரி என்பவர் மதுரை மணிநகரத்தைச் சேர்ந்தவர்.25 வயதான இவர் 2019-ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, அகில இந்திய அளவில் 286-வது இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றார்.

வெற்றிபெற்ற இவருக்கு இந்திய வருவாய்ப் பணி (Indian Revenue Service) பணியிடம் ஒதுக்கப்பட்டதுஇதற்கிடையில் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் சென்னைக் கிளையில் தனக்கு இந்திய ஆட்சிப் பணி (Indian Revenue Service) பணியிடம் ஒதுக்கக் கோரி பூரணசுந்தரி மனுத் தாக்கல் செய்தார்.மேலும் அவரது மனுவில்,’ஓபிசி இட ஒதுக்கீடு மற்றும் மாற்றுத்திறனாளிகள்  சட்டப்படி எனக்கு இந்திய ஆட்சிப் பணி (Indian Revenue Service) பணியிடம் வழங்கியிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.இந்த மனுவை விசாரித்த மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் சென்னைக் கிளை, பணியிடம் ஒதுக்கப்படாதது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,UPSC தேர்வில் வெற்றி பெற்ற மதுரையைச் சேர்ந்த செல்வி. பூரணசுந்தரிக்கு OBC & மாற்றுத்திறனாளி என்ற அடிப்படையில் IAS பணி வழங்காமல் IRS பணி வழங்கப்பட்டிருப்பது இடஒதுக்கீடு விதிகளுக்கே முரணானது. மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முறையிட்டுள்ள பூரணசுந்தரிக்கு திமுக துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

4 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

4 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

4 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

4 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

4 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago