மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முறையிட்டுள்ள பூரணசுந்தரிக்கு திமுக துணை நிற்கும் – மு.க. ஸ்டாலின்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
பூரணசுந்தரிக்கு OBC & மாற்றுத்திறனாளி என்ற அடிப்படையில் IAS பணி வழங்காமல் IRS பணி வழங்கப்பட்டிருப்பது இடஒதுக்கீடு விதிகளுக்கே முரணானது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பார்வையற்ற மாற்றுத்திறனாளியான பூரணசுந்தரி என்பவர் மதுரை மணிநகரத்தைச் சேர்ந்தவர்.25 வயதான இவர் 2019-ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, அகில இந்திய அளவில் 286-வது இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றார்.
வெற்றிபெற்ற இவருக்கு இந்திய வருவாய்ப் பணி (Indian Revenue Service) பணியிடம் ஒதுக்கப்பட்டதுஇதற்கிடையில் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் சென்னைக் கிளையில் தனக்கு இந்திய ஆட்சிப் பணி (Indian Revenue Service) பணியிடம் ஒதுக்கக் கோரி பூரணசுந்தரி மனுத் தாக்கல் செய்தார்.மேலும் அவரது மனுவில்,’ஓபிசி இட ஒதுக்கீடு மற்றும் மாற்றுத்திறனாளிகள் சட்டப்படி எனக்கு இந்திய ஆட்சிப் பணி (Indian Revenue Service) பணியிடம் வழங்கியிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.இந்த மனுவை விசாரித்த மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் சென்னைக் கிளை, பணியிடம் ஒதுக்கப்படாதது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,UPSC தேர்வில் வெற்றி பெற்ற மதுரையைச் சேர்ந்த செல்வி. பூரணசுந்தரிக்கு OBC & மாற்றுத்திறனாளி என்ற அடிப்படையில் IAS பணி வழங்காமல் IRS பணி வழங்கப்பட்டிருப்பது இடஒதுக்கீடு விதிகளுக்கே முரணானது. மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முறையிட்டுள்ள பூரணசுந்தரிக்கு திமுக துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.
#UPSC தேர்வில் வெற்றி பெற்ற மதுரையைச் சேர்ந்த செல்வி. பூரணசுந்தரிக்கு OBC & மாற்றுத்திறனாளி என்ற அடிப்படையில் IAS பணி வழங்காமல் IRS பணி வழங்கப்பட்டிருப்பது இடஒதுக்கீடு விதிகளுக்கே முரணானது!
மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முறையிட்டுள்ள பூரணசுந்தரிக்கு திமுக துணை நிற்கும்! pic.twitter.com/GviGEhz0BN
— M.K.Stalin (@mkstalin) October 24, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)