இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு ஜெயித்து சட்டசபைக்குள் சென்றால் தான் திமுகவினர் மீதமுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள். – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சார களமானது , தேர்தல் நாள் நெருங்க நெருங்க பரபரப்பாகி கொண்டே செல்கிறது. கட்சி தலைவர்கள் தங்கள் ஆதரவு வேட்பாளருக்காக வீதிவீதியாக வாக்கு சேகரித்து வருகின்றனர். அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக களமிறங்கி உள்ளார்.
அண்ணாமலை பிரச்சாரம் : அவருக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவினரும் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று ஈரோடு இடையன்காட்டு பகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அதிமுக – திமுக : அவர் பேசுகையில், திமுக ஆட்சிக்கு வரும் முன்னர் 517 வாக்குறுதிகள் கொடுத்தார்கள். ஆனால் அதில் 49 தான் நிறைவேற்றி உள்ளனர் . அவர்கள் ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் ஆகிவிட்டன. தற்போது இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு ஜெயித்து சட்டசபைக்குள் சென்றால் தான் திமுகவினர் மீதமுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று தனது பிரச்சாரத்தில் குறிப்பிட்டு பேசினார்.
30 அமைச்சர்கள் : தாய்மார்களுக்கு மாதம் 1000 ரூபாய் தருவோம் என்றார்கள். அதே போல, சிலிண்டருக்கு 100 ரூபாய் தருவோம் என்றார்கள் எதுவும் நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினார். அடுத்து , ஒரே ஒரு அதிமுக வேட்பாளாரை எதிர்த்து 30 அமைச்சர்கள் தேரோட்டில் இருக்கிறார்கள். என விமர்சனம் செய்து தனது பிரச்சாரத்தை தொடர்ந்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை பெரியார்…
திருவனந்தபுரம் : நாளை முதல் பொங்கல் பண்டிகைகள் தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் நாளை (ஜனவரி 14) பொங்கல் தினம,…
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 4 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்திய…
பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கான காரணங்களும், அதன் சிறப்புகளும், பொங்கல் வைக்க சரியான நேரம் எது என்பதை பற்றி இந்த செய்தி…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முடிந்து வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் தயாராகிவிட்டார்கள் என்று தான்…
காஷ்மீர் : ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோனாமார்க் மற்றும் காகங்கீர் இடையிலான 'இசட்-மோர்' (Z-Morh) சுரங்கப்பாதையை இன்று பிரதமர் மோடி திறந்துவைத்தார்.…