திமுகவினர் பச்சோந்தியை கூட தோற்கடித்து விடுவார்கள் – ஜெயக்குமார்
காஞ்சிபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கரையான் புற்று எடுக்க கருநாகம் உள்ளே புகுந்து விட்டது என சொல்வார்கள் அல்லாவா? அதுபோல தான் திமுக உள்ளே புகுந்து விட்டது.
அதிமுக 31 ஆண்டுகளாக ஆட்சி செய்த கட்சி. அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது. அதிமுகவில் கிளைகளாக செயலாளர் கூட முதலமைச்சர் ஆகலாம். அதே போல தான் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வந்துள்ளார். ஆனால் திமுகவில் வாரிசு அரசியல் தான் நடக்கிறது.
பிரதமர் மோடி, அரசியல் நிகழ்ச்சிக்காக தமிழகம் வருகிறார். இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது. எங்களை பொறுத்தவரை நாங்கள் தான் வெற்றி பெறுவோம். திமுகவும் தோல்வி பயத்தில் தான் இருக்கிறது. திமுகவை பொறுத்தவரையில், அவர்களுக்கு ஆளுநர் தேவை என்றால் வாழ்க ஆளுநர் சொல்வார்கள்.
ஆளுநர் தேவையில்லை என்றால் ஒழிக ஆளுநர் என்று சொல்வார்கள். செவ்வாழை தோட்டத்தில் குரங்கு புகுந்து விட்டால் என்ன அட்டகாசம் செய்யுமோ, அதுபோல அதிமுக ஆட்சியிலும் சட்டப்பேரவையில் திமுகவினர் அட்டகாசம் செய்தனர். திமுகவினர் நேரத்திற்கு தகுந்தாற்போல் சந்தர்ப்பவாத அரசியல் செய்கின்றனர். இவர்கள் பச்சோந்தியை கூட தோற்கடித்து விடுவார்கள் என தெரிவித்துள்ளார்.