திமுகவினர் காற்றில் கூட ஊழல் செய்வர்…! – அமைச்சர் கடம்பூர் ராஜூ

காற்றில் கூட ஊழல் செய்பவர்கள் தான் திமுகவினர். தமிழகத்தில் அவர்கள் ஆட்சி அமைந்தால், எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற நிலை தான் இருக்கும்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக சேயாள்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜூ மேலப்பாண்டவர்மங்கலத்தில், பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இவர் அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு சென்று வாக்கு சேகரித்த பின், ராஜீவ் நகர், அன்னை தெரசா நகர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், கோவில்பட்டி தொகுதி மக்களுக்கு 10 ஆண்டுகளாக எண்ணற்ற திட்டங்களை கொண்டுவந்துள்ளேன்.
மேலும், காற்றில் கூட ஊழல் செய்பவர்கள் தான் திமுகவினர். தமிழகத்தில் அவர்கள் ஆட்சி அமைந்தால், எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற நிலை தான் இருக்கும். அதிமுக ஆட்சி அமைந்தால் மட்டும் தன, மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும். ஆகவே தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைய உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025