#BREAKING: 8 மாதங்களில் திமுக ஆளுங்கட்சியாக மாறிவிடும்- ஸ்டாலின் பேச்சு.!

Default Image

கொரோனா காரணமாக  கூட்டம் 5 மாதங்கள் கழித்து திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் தற்போது மு.க ஸ்டாலின் பேசி வருகிறார். அதில்,  நான் தலைவராக இருக்கும் போது துரைமுருகன் பொதுச் செயலாளராக இருப்பது பெருமையாக இருக்கிறது.

துரைமுருகன் பொதுச் செயலாளர் ஆனதையும்,  டிஆர் பாலு பொருளாளர் ஆனதையும் அறிந்தால் முன்னாள் முதல்வர் கருணாநிதி மகிழ்ச்சி அடைவார். அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், க.அன்பழகன் வகித்த பதவி துரைமுருகனுக்கு வந்துள்ளது.

துரைமுருகனும், டிஆர் பாலுவும் கட்சியில் படிப்படியாக உயர்ந்து  தற்போதைய நிலைமையை ஏற்றியுள்ளனர் என  மு க ஸ்டாலின் தெரிவித்தார். துரைமுருகன், டிஆர் பாலுவை பார்க்கும்போது கருணாநிதியின் முகம் தான் எனக்கு தெரிகிறது.

இன்னும் எட்டு மாதங்களில் திமுக ஆளுங்கட்சியாக மாறிவிடும் என பொதுக்குழுவில் மு க ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், ஒன்பது முறை சட்டமன்றத்திற்கு சென்றுள்ள துரைமுருகன் ஒரு சூப்பர் ஸ்டார், சட்டமன்றத்தில் ஸ்டாராக மட்டுமில்ல; சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் துரைமுருகன் என ஸ்டாலின் தெரிவித்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்