திமுக விவசாயிகளின் உற்ற துணையாக என்றுமே நிற்கும் – மு.க ஸ்டாலின்!
விவசாயிகளுக்கு பல நன்மைகள் செய்துள்ள திமுக விவசாயிகளின் உற்ற துணையாக என்றுமே நிற்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியிலுள்ள எல்லை பகுதியில் பல லட்சக்கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனர். பஞ்சாப் ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள் சட்டங்கள் மூன்றையும் திடும்ப பெற கோரி நடத்திக்கொண்டிருக்கும் இந்த போராட்டத்திற்கு பல அரசியல் தலைவர்களும், எதிர்க்கட்சிகளும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று விவசாயிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த விவசாயிகள் தினத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் விவசாயிகளுக்காக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இலவச மின்சாரம், விவசாயக் கடன் தள்ளுபடி, உழவர் சந்தைகள், குறைந்தபட்ச ஆதார விலை என சாதித்த திமுக என்றுமே விவசாயிகளின் உற்ற துணையாக நிற்கும் எனவும், 3 வேளாண் சட்டங்களை திரும்பபெற பிரதமர் உத்தரவிட வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,
இலவச மின்சாரம், விவசாயக் கடன் தள்ளுபடி, உழவர் சந்தைகள், குறைந்தபட்ச ஆதார விலை என சாதித்த திமுக என்றுமே விவசாயிகளின் உற்ற துணையாக நிற்கும்.
விவசாயிகள் அனைவருக்கும் #NationalFarmersDay வாழ்த்துகள்!
மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக இன்று @PMOIndia வேண்டும். pic.twitter.com/GjzvbZxim5
— M.K.Stalin (@mkstalin) December 23, 2020