மாண்புமிகு கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் என்றும் ஜனநாயக விரோதிகளை எதிர்ப்போம் என அமைச்சர் அன்பில் மகேஷ் ட்வீட்.
தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜின் வீடு , தலைமை செயலக அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சுமார் 18 மணிநேரம் சோதனை நடத்தி பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி நேரில் சென்று அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து, அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளின் மூலமாக தனக்கு எதிரான முற்போக்கு அரசியல் சக்திகளை அச்சுறுத்த பா.ஜ.க முயற்சிக்கின்றது! கொள்கை உறுதியோடு பயணிக்கும் தி.மு.க இது போன்ற மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சாது! மாண்புமிகு கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் என்றும் ஜனநாயக விரோதிகளை எதிர்ப்போம் என பதிவிட்டுள்ளார்.
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…
நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…
சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…