திமுக vs அதிமுக vs பாஜக.! நேரடியாக போட்டியிடும் தொகுதிகள் இதோ..

DMK ADMK BJP

Election2024 : திமுக, அதிமுக, பாஜக ஆகியவை நேரடியாக 9 தொகுதிகளில் மோதுகின்றன.

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் நிறைவு பெற்று நேற்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செய்யப்பட்டது.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் போட்டியிட மொத்தம் 1503 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அதில் 933 நபர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 569 நபர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. நாளை மாலையுடன் வேட்புமனு வாபஸ் பெரும் தேதி முடிவடைவதால், நாளை  மாலை வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியாகும்.

இதில் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக,பாஜக கட்சி வேட்பாளர்கள் வாபஸ் பெறப்போவதில்லை. அதனால், தற்போதே திமுக, அதிமுக , பாஜக வேட்பாளர்கள் நேரடியாக மோதும் தொகுதிகள் விவரங்கள் வெளியாகி உள்ளது. அதில் திமுக அதிமுக பாஜக, திமுக – அதிமுக , காங்கிரஸ் – பாஜக வேட்பாளர்கள் மோதும் தொகுதிகள் விவரங்களை இதில் காணலாம்.

திமுக vs அதிமுக vs பாஜக :

வடசென்னை :

திமுக – கலாநிதி வீராசாமி ; அதிமுக – ராயபுரம் மனோ ; பாஜக – பால் கனகராஜ்.

தென் சென்னை :

திமுக – தமிழச்சி தங்கபாண்டியன் ; அதிமுக – ஜெயவர்த்தன் ; பாஜக – தமிழிசை சௌந்தரராஜன்;

வேலூர் :

திமுக – டி.எம்.கதிர் ஆனந்த் ; அதிமுக – பசுபதி ; பாஜக – ஏ.சி.சண்முகம் (புதிய நீதி கட்சி) தாமரை சின்னம்.

திருவண்ணாமலை :

திமுக – சி.என்.அண்ணாதுரை ; அதிமுக – கலியபெருமாள் ; பாஜக – அஸ்வந்தாமன்.

நாமக்கல் :

திமுக – மாதேஸ்வரன் ; அதிமுக – தமிழ்மணி ; பாஜக – கே.பி.ராமலிங்கம்.

நீலகிரி (தனி) :

திமுக – ஆ.ராசா ; அதிமுக – லோகேஷ் தமிழ்ச்செல்வன் ; பாஜக – எல்.முருகன்.

கோயம்புத்தூர் :

திமுக – ராஜ்குமார் ; அதிமுக – சிங்கை ராமச்சந்திரன் ; பாஜக – அண்ணாமலை.

பொள்ளாச்சி :

திமுக – கே.ஈஸ்வர சாமி ; அதிமுக – கார்த்திகேயன் ; பாஜக – வசந்த ராஜன்.

பெரம்பலூர் :

திமுக – அருண் நேரு ; அதிமுக – சந்திரமோகன் ; பாஜக – பாரிவேந்தர் (இந்திய ஜனநாயகம் கட்சி) தாமரை சின்னம்.

காங்கிரஸ் vs பாஜக :

திருவள்ளூர் (தனி) :

காங்கிரஸ் – சசிகாந்த் செந்தில் ; பாஜக – பாலகணபதி.

கிருஷ்ணகிரி :

காங்கிரஸ் – கே.கோபிநாத்  ; பாஜக – நரசிம்மன்.

கரூர் :

காங்கிரஸ் – ஜோதிமணி ; பாஜக – வி.வி.செந்தில்நாதன்.

சிவகங்கை :

காங்கிரஸ் – கார்த்தி சிதம்பரம் ; பாஜக – தேவநாதன் யாதவ்.

விருதுநகர் :

காங்கிரஸ் – மாணிக்கம் தாகூர் ; பாஜக – ராதிகா சரத்குமார்.

திருநெல்வேலி :

காங்கிரஸ் – ராபர்ட் ப்ரூஸ் ; பாஜக – நயினார் நாகேந்திரன்.

கன்னியாகுமரி :

காங்கிரஸ் – விஜய் வசந்த் ; பாஜக  – பொன்.ராதாகிருஷ்ணன்.

புதுச்சேரி :

காங்கிரஸ் – வைத்தியலிங்கம் ல ; பாஜக – நமச்சிவாயம்.

திமுக vs அதிமுக :

தூத்துக்குடி :

திமுக – கனிமொழி கருணாநிதி ; அதிமுக – சிவசாமி வேலுமணி.

தேனி :

திமுக – தங்க தமிழ்செல்வன் ; அதிமுக – நாராயணசாமி.

ஈரோடு :

திமுக – பிரகாஷ் ; அதிமுக – ஆற்றல் அசோக்குமார்.

சேலம் :

திமுக – செல்வ கணபதி ; அதிமுக – விக்னேஷ்.

கள்ளக்குறிச்சி :

திமுக – மலையரசன் ; அதிமுக – குமரகுரு.

ஆரணி :

திமுக – தரணி வேந்தன் ; அதிமுக – கஜேந்திரன்.

தர்மபுரி :

திமுக – ஆ.மணி ; அதிமுக – அசோகன்.

அரக்கோணம் :

திமுக – ஜெகத்ரட்சகன் ; அதிமுக – விஜயன்.

காஞ்சிபுரம் (தனி) :

திமுக – ஜி.செல்வம் ; அதிமுக – ராஜசேகர்.

ஸ்ரீபெரும்புதூர் :

திமுக – டி.ஆர்.பாலு ; அதிமுக – பிரேம்குமார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Tamilnadu Live
Pooran
TATAIPL - DCvLSG
KL Rahul
Vijay - Ashwath Marimuthu
DC vs LSG
janaNayagan - Vijay