தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் கொண்டாட்டம்..!
தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கி , பட்டாசு வெடித்து உற்சாக கொண்டாட்டம்.
இன்று காலை தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் பதவியேற்றார். முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம். சேலத்தில் 500 ஏழை எளிய மக்களுக்கு இனிப்புகளுடன் வேஷ்டி, சேலைகள் திமுக தொண்டர்கள் வழங்கினார்.
முதல்வராக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பதவியேற்றது அடுத்து திண்டுக்கல்லில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம். ஈரோட்டில் வழக்கறிஞர்கள் முகக்கவசம் வழங்கினர். மேலும், கன்னியாகுமரி திருவண்ணாமலையில் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர். கோவை, தர்மபுரி, மதுரை, ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் இனிப்பு வழங்கி திமுக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்.