முதலமைச்சருக்கு பிறந்தநாள் பரிசாக திமுக தொண்டர் கொடுத்த ஒட்டகம்.! காவல்துறை அனுமதி மறுப்பு.!

Default Image

திமுக தொண்டர் ஜாகிர்ஷா முதலமைச்சருக்கு பிறந்தநாள் பரிசாக ஒட்டகத்துடன் வந்துள்ளார். 

முதல்வர் பிறந்தநாள்:

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை இன்று பிரமாண்டமாக கொண்டாடுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சரின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஒட்டகம் பரிசு :

இந்நிலையில் திமுக தொண்டர் ஜாகிர்ஷா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் பரிசாக வழங்குவதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 2 வயது ஒட்டகத்துடன் வந்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய ஜாகிர்ஷா முதல்வருக்கு வழங்கிய பரிசுகளை பட்டியலிட்டு கூறினார். உலகில் இதுவரை யாரும் தராத பரிசாக இந்த ஒட்டகத்தை வழகுவதாக அவர் மேலும் கூறினார். ஆனால் காவல்துறையினர் ஒட்டகத்தை பரிசாக அளிக்க அனுமதி மறுத்துவிட்டனர்.

DMK volunteer Zakirsha 2

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்