திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2, காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஏன்.? திருமா விளக்கம்…
DMK-VCK :வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் பிரதான கட்சியாக உள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி. கடந்த 2019 தேர்தலில் விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் ஒன்றில் தனி சின்னத்திலும் இன்னொரு தொகுதியில் திமுக சின்னத்திலும் நின்று வெற்றிபெற்றனர்.
Read More – மக்களவை தேர்தல்..! சிவகங்கை தொகுதியில் ஓ.பி.எஸ் போட்டியிட விருப்ப மனு
அதனால், இன்று திமுக, விசிகவுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விசிக தலைவர் 3 தனித்தொகுதி, 1 பொதுத்தொகுதி கேட்டும் இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் இரண்டு தனித்தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள், விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் , மதிமுகவுக்கு 1 தொகுதி, கொமதே கட்சிக்கு 1 தொகுதி என தொகுதி பங்கீடு உறுத்தியானது.
விசிகவுக்கு மீண்டும் 2 தனித்தொகுதிகள் மட்டுமே ஒதுக்கியது விசிக கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இணையத்திலும் இந்த விவகாரம் விவாதப்பொருளாக மாறியது. அதுபற்றி நேற்று சென்னையில் கட்சி மேடையில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் அதற்கான காரணத்தை விளக்கினார்.
Read More – 96வது ஆஸ்கர் விருது கொண்டாட்டம்… ஓபன்ஹைமருக்கு குவியும் விருதுகள்…
அதில், காங்கிரசுக்கு 10, விசிகவுக்கு 2 ஏன், காங்கிரஸ் கட்சி ஒரு காலத்தில் இந்தியாவையே ஆண்ட கட்சி. அவர்கள் தான் மற்ற கட்சிகளுக்கு கூட்டணி பிரித்து கொடுத்தார்கள். தற்போது அவர்களே மாநில கட்சியிடம் கூட்டணி கேட்கும் நிலைமைக்கு வந்துள்ளனர்.
தமிழக்த்தில் ஆண்ட கட்சி காங்கிரஸ். 20 – 30 இடங்களில் போட்டியிட்டு வந்த தேசிய கட்சி 10 இடங்களில் போட்டியிடுகிறது. நாம் போராடி முன்னேறி 2 இடங்களில் போட்டியிடுகிறோம். விசிக முன்னேறி சென்று கொண்டு இருக்கிறது. அம்பேத்கர் பேரை கொண்டாலே சமுக நெருக்கடி உண்டாகி விடுகிறது.
அடிப்படையில் திருமாவளவன் என்பவன் யார் என்ற கேள்வி எழுந்து விடுகிறது. இவர்களை (விசிக) ஊக்கப்படுத்தினால் நமது கட்சிக்கும் சரிவு உண்டாகிவிடும். இவர்களை பிடிக்காதவர்கள் நமது கட்சிக்கு எதிராக வாக்களிக்கும் நிலைமை வரும். தற்போது 2 தொகுதி 3 ஆகவில்லை என்றாலும் கூட 2 ஒன்றாகவில்லை என்று நினைத்துக்கொள்ள வேண்டும்.
Read More – மக்களவை தேர்தல்! வேட்பாளர்களை அறிவித்த மம்தா பானர்ஜி… கடும் அதிருப்தியில் காங்கிரஸ் கட்சி
திமுகவுக்கு 2 தொகுதி குறைத்துள்ளது. கடந்த முறை 23 தொகுதிகளில் இருந்த உதயசூரியன் சின்னம், இந்த முறை 22ஆக குறைந்துளளது. நாம் முன்னர் 1 தனி சின்னம், 1 திமுக சின்னத்தில் போட்டியிட்டோம். தற்போது இப்போது 2 சின்னம் தனி சின்னத்தில் போட்டியிடுகிறோம்.
1 தொகுதி கிடைக்காமல் அதிமுகவுக்கு போனால் இத்தனை நாள் பேசி வளர்த்த கருத்துக்கள் வெற்றி வாய்ப்பு என்னவாகும், பாஜக – அதிமுக ஏன் பிரிந்தார்கள், எதற்காக பிரிந்தார்கள். அதிமுக – பாஜக – பாமக சேர்ந்தே கடந்த தேர்தல்களில் தோற்றுப்போனார்கள். இப்போது தனியே நிற்கிறார்கள். தெரிந்து தான் தனித்து நிற்கிறார். இங்கு எல்லாமே அரசியல் தான் தான் என விசிக தலைவர் திருமாவளவன் நேற்றைய அரசியல் நிகழ்வில் பேசினார்.