திமுக – விசிக – மதிமுக.! இன்று இறுதி முடிவு எட்டப்படுமா.? முதல்வருடன் சந்திப்பு.!
DMK-VCK : மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம் லீக் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு ஏற்பட்டுள்ள நிலையில், திமுகவின் பிரதான கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் இன்னும் இறுதி முடிவை எடுக்காமல் இருந்து வருகின்றன.
Read More – புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்.! அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி.!
இதில் விசிக சார்பில் 2 தனி தொகுதிகளும், ஓர் பொது தொகுதியும் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் திமுக தரப்பில் இருந்து 2 தனி தொகுதி மட்டுமே கொடுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல, மதிமுக 2 தொகுதிகள் கேட்ட நிலையில், ஒரு மக்களவை தொகுதியும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பும் அளிக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read More – மகளிர் தினத்தன்று பிரதமர் கொடுத்த அறிவிப்பு… சமையல் சிலிண்டர் விலை அதிரடி குறைவு!
ஏற்கனவே, தொகுதி பங்கீடு தொடர்பாக டி.ஆர்.பாலு தலைமையிலான குழு உடன் விசிக பொறுப்பாளர்கள் பேசி முடிவு எட்டப்படாத நிலையில், முதல்வரை சந்திக்க திருமாவளவன் அனுமதி கேட்டு இருந்தார். முதல்வர் அனுமதி கொடுத்ததன் பெயரில் இன்று தலைமை செயலகத்தில், முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
Read More – எங்களுக்கு இப்படிப்பட்ட அரசு தான் வேணும்… கோரிக்கை வைத்த முதல்வர்.!
இதனை அடுத்து, திமுக நாடாளுமன்ற தொகுதி பங்கீடு ஆலோசானை குழுவுடன் மீண்டும் விசிக நிர்வாகிகள் ஆலோசனை நிகழ்த்தி தொகுதி பங்கீடை இறுதி செய்ய உள்ளனர் என கூறப்படுகிறது. அதே போல இன்று மதிமுகவும் தங்கள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்துவிடும் என கூறப்படுகிறது. ஏனென்றால் நாளை மறுநாள் 10ஆம் தேதி திமுக சார்பாக போட்டியிடும் திமுக உறுப்பினர்களுக்கு நேர்காணல் நடைபெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.