திமுக முப்பெரும் விழா: ஒவ்வொரு துறைகளிலும் இனி விடியல் பிறக்கப்போகிறது-முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு துறைகளிலும் இனி விடியல் பிறக்கப்போகிறது என்று உரையாற்றியுள்ளார்.
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15, தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17, திமுக தொடங்கப்பட்ட செப்டம்பர் 17 ஆகிய மூன்று நிகழ்வுகளையும் சேர்த்து திமுக முப்பெரும் விழாவாக கொண்டாடி வருகிறது. இந்த முப்பெரும் விழா அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது.
இதன் காரணமாக அண்ணா அறிவாலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக முப்பெரும் விழா தொடங்கியது. இந்த முப்பெரும் விழாவில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது ஆகியவை காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மேலும், இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, தமிழ்நாட்டில் நிரந்தரமாக திமுக ஆட்சி தொடர்ந்திட நாம் பணியாற்ற வேண்டும். இது குறித்து தொண்டர்களிடம், உள்ளாட்சி தேர்தலில் நாம் 100க்கு 100% வெற்றி பெற வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், சென்னை மாநகராட்சியில் கொரோனா வழிமுறைகளை கடைபிடிப்பதை கண்காணிப்பதற்காக 200 குழுக்கள் அமைக்கப்படவுள்ளது.
கொரோனா வழிமுறைகளை பின்பற்றாத நபர்கள் மீது காவல்துறையினருடன் இணைத்து 200 குழுக்களும் நடவடிக்கை எடுக்க செயல்படும். மாநகராட்சி சார்பில் 5 பேர், போலீசார் ஒருவர் என வார்டிற்கு ஒரு குழு அமைக்கப்படும். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு துறைகளிலும் இனி விடியல் பிறக்கப்போகிறது. மாதந்தோறும், சட்டப்பேரவையில் நான் அறிவித்த ஒவ்வொரு திட்டம் குறித்தும் ஆய்வு செய்வேன். திமுகவிற்கு வாக்களிக்காத நபர்கள் கூட நாம் வாக்களிக்காமல் போய்விட்டோமே என வருத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.