கதவுகள் அடைக்கப்பட்ட பிறகும் திமுகவுக்கு ஆதரவாக வைகோ பேசியிருப்பது அவரது பண்பு…!மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்
திமுக அனைத்துக்கட்சிகூட்டம் நடத்துவதன் உள்நோக்கம்தெரியவில்லை என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறுகையில், கதவுகள் அடைக்கப்பட்ட பிறகும் திமுகவுக்கு ஆதரவாக வைகோ பேசியிருப்பது அவரது பண்பு ஆகும்.மேகதாதுவிவகாரத்தில் திமுக அனைத்துக்கட்சிகூட்டம் நடத்துவதன் உள்நோக்கம்தெரியவில்லை. புயல்பாதிப்பில் மத்தியஅரசு நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் கூறுவது விதண்டாவாதத்திற்கே என்றும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.