மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு …!திமுக சார்பில் இன்று அனைத்து கட்சி கூட்டம்…!!

Default Image

கர்நாடக அரசுக்கு மேகதாதுவில் அணைக்கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இதற்கு தமிழக கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.மேகதாதுவில் அணைக்கட்டினால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது என்று எதிர்க்கட்சியான திமுக எதிர்ப்பு தெரிவித்தது.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஏற்கனவே பிரதமருக்கு கடிதம் எழுதினார்.பாரதீய ஜனதா கட்சியும் மேகதாதுவில் அணை கட்டுவதை அனுமதிக்க மாட்டோம் என்று எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று  காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சிக்கூட்டம் நடைபெறும் என திமுக அழைப்பு விடுத்துள்ளது.இன்று  காலை 10.30 மணிக்கு நடைபெறும்.இந்த அனைத்து கட்சிக்கூட்டத்தில்  காங்கிரஸ் ,முஸ்லீம் லீக், தேமுதிக , மதிமுக , விடுதலைசிறுத்தைகள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , இந்திய கம்யூனிஸ்ட் , தமாக உட்பட பல கட்சிகள் பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்