இன்று மனிதநேய மக்கள் கட்சி மற்றும் விசிகவுடன் திமுக பேச்சுவார்த்தை..!
DMK: மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்க உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்து வருகிறது.
READ MORE- நாடாளுமன்ற தேர்தல்..! அதிமுக விருப்ப மனு பெறுவதற்கான அவகாசம் நீட்டிப்பு
இன்று மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தனது கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள அண்ணா அறிவாலத்தில் டி.ஆர்.பாலு தலைமையிலான குழு உடன் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த பேச்சுவார்த்தை ஈடுபடுகிறார்கள்.
READ MORE- போத்தீஸ் நிறுவனர் சடையாண்டி மூப்பனார் மறைவு.! சொந்த ஊரில் நல்லடக்கம்…
திமுக கூட்டணியில் 4 கட்சிகளுடன் ஏற்கனவே தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள சிபிஐ, சிபிஎம், கொமதேக மற்றும் ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உடன்பாடு செய்யப்பட்டது. அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.