விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸுக்கு ஆதரவு-திருமாவளவன்
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸுக்கு ஆதரவு அளிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதனை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என்றும் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸுக்கு ஆதரவு அளிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக – காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு விசிக ஆதரவு அளிக்கிறது . இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள்.திமுக – காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு விசிக முழுமையாக பாடுபடும் என்று தெரிவித்துள்ளார்.