மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தேர்தல் பரப்புரையைத் திமுக தொடங்கியிருப்பதாக அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக, தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க, அறிக்கை தயாரிக்க, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு என தனித்தனி குழுக்களை அமைத்து பணிகளை தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் திமுக, தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளதாக அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “மக்களவைத் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியது திமுக. தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க இந்தியாவின் தென் முனையில் ஒலிக்கத் தொடங்கியிருக்கும் இந்தக் குரல், வடக்கிலும் எதிரொலிக்கும், இந்தியாவின் பெருமைகளை மீட்டெடுக்கும். பாசிசம் வீழும். #INDIA வெல்லும்” எனப் பதிவிட்டுள்ளார்.
பட்டாசு ஆலை வெடி விபத்து – முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!
நேற்றைய தினம் தொடங்கி 3 நாட்களுக்கு திமுக தொடர் பொதுக் கூட்டங்களை நடத்துகிறது. ”உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்-பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்” என்ற தலைப்பில் மக்களவை தொகுதி வாரியாக மொத்தம் 37 கூட்டங்கள் நடத்தப்படுகின்றன, இது தொடர்பான வீடியோ காட்சியையும் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…