சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக ரூ.114 கோடியும், அதிமுக ரூ.57 கோடியும் செலவு.., செலவு விபரங்களை சமர்பிக்காத பாஜக ..!
தமிழகம், புதுச்சேரியில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக ரூ.114 கோடியும், அதிமுக ரூ.57 கோடியும் செலவு செய்துள்ளனர்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் செய்த செலவு விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தன. அதில், தமிழகம், புதுச்சேரியில் நடந்த தேர்த்தலுக்காக திமுக ரூ.114.11 கோடியும், அதிமுக ரூ.57.5 கோடியும் செலவு செய்துள்ளனர்.
பாமக ரூ.30 லட்சம் செலவு செய்துள்ளனர். மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ரூ.154.28 கோடியும், காங்கிரஸ் ரூ.84.93 கோடி செலவு செய்துள்ளனர். இந்தியதேர்தல் ஆணையம் பாஜக செலவு செய்த விவரத்தை இன்னும் வெளியிடவில்லை.