திமுக அதிக நேரத்தை அதிமுகவின் குறைகளை காண்பதில் தான் செலவிடுகிறது என பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் தனியார் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அவர்கள் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மிதிவண்டிகள், தையல் மெஷின் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வானதி சீனிவாசன் அவர்கள், அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் குறித்த புகார்கள் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கலாம்.
ஆனால் அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் உள்ள குறைகளை கண்டறிந்து, அதிலேயே திமுக நேரம் செலவிடாமல் ஆக்கப்பூர்வமான மக்கள் பணிகளிலும் செலவிடலாம் என தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் நலத் திட்டங்களுக்காக தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி வழங்கும் விஷயத்தில், தமிழ்நாடு நிதித் துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் மத்திய அரசை பாராட்ட மனம் இல்லாமல் இருக்கிறார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…