திமுகவினர் பெண்களை கீழ்த்தரமாக பேசுகிறார்கள் – முதல்வர் பழனிசாமி குற்றசாட்டு

திமுகவினருக்கு மக்கள் தேர்தல் மூலம் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணாநகரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி பெண்களை மிகவும் கீழ்த்தரமாக கொச்சைப்படுத்தி பேசுவதாக கூறி, தேர்தல் பரப்புரைகளில் பெண்களை மிகவும் கீழ்த்தரமாக பேசும் திமுகவினருக்கு மக்கள் தேர்தல் மூலம் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுபோன்று பெண்களை தரக்குறைவாக பேசும் பேச்சாளர்களை எல்லாம் தட்டி கேட்க தைரியம் இல்லாத தலைவர் முக ஸ்டாலின் தான். ஆகையால், பெண்கள் எப்படி நடமாட முடியும். ஆட்சி அதிகாரத்தில் இல்லாத போதே திமுகவை சேர்ந்தவர்கள் இப்படி பெண்களை அவமானப்படுத்தி, தரக்குறைவாக பேசுகிறார்கள். இதெல்லாம் மன்னிக்க முடியாத குற்றம் என குற்றசாட்டியுள்ளார்.