“திமுக தனது அரசியல் நாடகத்தை நிறுத்தி;உண்மை நிலையை மாணவர்களுக்கு விளக்க வேண்டும்” – எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்..!

திமுக தனது அரசியல் நாடகத்தை நிறுத்தி;நீட் தேர்வு குறித்த உண்மை நிலையை மாணவர்களுக்கு விளக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது.அதன்படி, இந்த தேர்வினை தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.
இதற்கிடையில்,தனுஷ் என்ற மாணவன் நீட் தேர்வு எழுதுவதற்கு முன்பாகவே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்த நிலையில், அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி கனிமொழி பன்னிரண்டாம் வகுப்பில் 600 க்கு 562.28 மதிப்பெண் பெற்ற நிலையில் தஞ்சாவூரில் தாமரை இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் நேற்று நீட் தேர்வு எழுதியுள்ளார்.கனிமொழி நேற்று நீட் தேர்வினை எழுதி விட்டு வீடு திரும்பிய நிலையில், நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கனிமொழி தூக்கிட்டு தற்கொலை செய்ததற்கு காரணம், நீட் தேர்வில் தோல்வி பயத்தால் என்று கனிமொழியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில்,திமுக தனது அரசியல் நாடகத்தையும் , நீட் பயத்தால் மாணவர்கள் உயிரிழப்பதை வேடிக்கை பார்ப்பதை இனியாவது நிறுத்திவிடவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“நீட்தோல்வி பயத்தால் மாணவி அரியலூர் கனிமொழி மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரின் பெற்றோருக்கும் , குடும்பத்தார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன், திமுக தனது அரசியல் நாடகத்தையும் , நீட் பயத்தால் மாணவர்கள் உயிரிழப்பதை வேடிக்கை பார்ப்பதை இனியாவது நிறுத்திவிட்டு, மாணவர்களின் நலன் கருதி உண்மை நிலையை மக்களுக்கும் மாணவர்களுக்கும் விளக்க வேண்டும்.
மாணவர்கள் இனி இது போன்ற முடிவுகளை எடுக்காமல் வாழ்க்கையில் எந்த தேர்வையும் துணிந்து எதிர் கொள்ள வேண்டுமென உங்கள் உற்றார்களில் ஒருவனாக கேட்டு கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.
இனியாவது நிறுத்திவிட்டு,
மாணவர்களின் நலன் கருதி உண்மை நிலையை மக்களுக்கும் மாணவர்களுக்கும் விளக்க வேண்டும்.
மாணவர்கள் இனி இது போன்ற முடிவுகளை எடுக்காமல் வாழ்க்கையில் எந்த தேர்வையும் துணிந்து எதிர் கொள்ள வேண்டுமென
உங்கள் உற்றார்களில் ஒருவனாக கேட்டு கொள்கிறேன்.(2/2)— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) September 14, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…
April 30, 2025
“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!
April 30, 2025
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025
கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!
April 30, 2025
“தவெக தொண்டர்களின் செயல் கவலை அளிக்கிறது!” விஜய் வேதனை!
April 30, 2025