ராகுல்காந்தி உடனான தொடர்பை திமுக துண்டிக்க வேண்டும் – எம்எல்ஏ கு.க.செல்வம்

ராகுல்காந்தி உடனான தொடர்பை திமுக துண்டிக்க வேண்டும் ன்று எம்எல்ஏ கு.க.செல்வம் தெரிவித்துள்ளார்.
அண்மையில்திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து வி.பி துரைசாமியை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி நீக்கம் செய்வதாக அறிவித்தார் . இதனால், துணைப் பொதுச்செயலாளராக அந்நியூர் செல்வராஜை மு.க.ஸ்டாலின் நியமித்தார்.இதனிடையே சென்னை கமலாலயத்தில் வி.பி.துரைசாமி பாஜக மாநில தலைவர் முருகனை சந்தித்து பாஜகவில் இணைந்தார்.வி.பி துரைசாமி பாஜக மாநில துணைத்தலைவராக நியமனம் செய்வதாக தமிழக பாஜக தலைவர் முருகன்அறிவித்தார்.
இதன் பின் திமுகவின் ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்எல்ஏ கு.க. செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தது. இந்நிலையில் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்தார் திமுகவை சேர்ந்த கு.க. செல்வம்.இதன் பின்னர் எம்எல்ஏ கு.க. செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், என்னுடைய தொகுதி விவகாரங்களை குறித்து தான் ஜே.பி.நட்டா அவர்களை சந்தித்தேன். திமுகவில் உட்கட்சி தேர்தலை ஸ்டாலின் முறையாக நடத்த வேண்டும். தமிழ் கடவுள் முருகனை தவறாக பேசியவர்களை மு..க. ஸ்டாலின் கண்டிக்க வேண்டும். நான் – பிஜேபியில் இணையவில்லைதொகுதி மேம்பாட்டுக்காக மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்திக்க வந்தேன். நட்டாவை சந்தித்தத்தற்காக என்மீது நடவடிக்கை எடுத்தால் எடுக்கட்டும்.நல்லாட்சி வழங்கி வரும் நரேந்திர மோடி தலைமையிலான அரசை விமர்சனம் செய்யும் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் உறவை மு.க.முறித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025