நிறைவேற்றியதாக கூறும் 202 வாக்குறுதிகளை திமுக பட்டியலிட வேண்டும் – ஜெயக்குமார்

Published by
பாலா கலியமூர்த்தி

எதிர்பார்க்கப்பட்ட வாக்குறுதியான இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 தரவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு.

சென்னை எழும்பூரில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றாமல் கண்துடைப்பு வேலையை செய்து வருகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வாக்குறுதியான இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 கொடுக்கவில்லை, மதத்தோரும் முதியவர்களுக்கு ரூ.1000 லிருந்து ரூ.1,500 அதுவும் கொடுக்கவில்லை.

கல்விக்கடன் ரத்து, சிலிண்டர் மானியம் ரூ.100 தரவில்லை என்றும் பெட்ரோல் டீசல் ரூ.5 குறைப்பதாக கூறி ரூ.3 மட்டுமே குறைத்துள்ளார்கள். நகைக்கடன் மற்றும் நீட் தேர்வு ரத்து போன்ற முக்கிய வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. இந்த அரசு கண்துடைப்புக்காக குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

தேர்தல் வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறும் திமுக, அவற்றை பட்டியலிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே சமீபத்தில் திமுக அளித்த வாக்குறுதியில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

Live: பங்குனி உத்திர திருவிழா முதல்.., சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா வரை.!

Live: பங்குனி உத்திர திருவிழா முதல்.., சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா வரை.!

சென்னை : இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம்…

13 minutes ago

லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு.!

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஏற்பட்ட ஒரு துயரமான சாலை விபத்தில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி…

21 minutes ago

ஐபிஎல் தொடரில் கிங் கோலியின் புதிய சாதனை.! வேற யாருமே இல்ல..! அப்படி என்ன செய்தார்?

பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில்…

1 hour ago

தோனி தலைமையில் இன்று களம் காணும் CSK.! வெற்றிப்பாதைக்கு திரும்புமா சென்னை?

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11)…

2 hours ago

தமிழ்நாடு வந்தார் அமித் ஷா.., புதிய பாஜக தலைவர் குறித்து ஆலோசனை.!

சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30…

3 hours ago

விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : 2026 சட்டப்பேரவை தேர்தலை கவனத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார்.…

3 hours ago