நிறைவேற்றியதாக கூறும் 202 வாக்குறுதிகளை திமுக பட்டியலிட வேண்டும் – ஜெயக்குமார்
எதிர்பார்க்கப்பட்ட வாக்குறுதியான இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 தரவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு.
சென்னை எழும்பூரில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றாமல் கண்துடைப்பு வேலையை செய்து வருகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வாக்குறுதியான இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 கொடுக்கவில்லை, மதத்தோரும் முதியவர்களுக்கு ரூ.1000 லிருந்து ரூ.1,500 அதுவும் கொடுக்கவில்லை.
கல்விக்கடன் ரத்து, சிலிண்டர் மானியம் ரூ.100 தரவில்லை என்றும் பெட்ரோல் டீசல் ரூ.5 குறைப்பதாக கூறி ரூ.3 மட்டுமே குறைத்துள்ளார்கள். நகைக்கடன் மற்றும் நீட் தேர்வு ரத்து போன்ற முக்கிய வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. இந்த அரசு கண்துடைப்புக்காக குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
தேர்தல் வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறும் திமுக, அவற்றை பட்டியலிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே சமீபத்தில் திமுக அளித்த வாக்குறுதியில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.