இதற்காக திமுகவினர் வெட்கி தலை குனிய வேண்டும் – அண்ணாமலை
தங்கள் திறனற்ற தன்மையை மறைக்க பொய்களைப் பரப்பி மாண்புமிகு தமிழக ஆளுநரின் மேல் பழியை போட்டுக் கொண்டிருந்த திமுகவினர் வெட்கி தலை குனிய வேண்டும் என அண்ணாமலை ட்விட்.
சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை அமைச்சர் ரகுபதி சந்தித்து பேசினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தொடர்பான விளக்கங்களை ஆளுநருக்கு அளித்துள்ளேன். ஆளுநரை சந்தித்து அரை மணி நேரத்திற்கு மேல் மசோதா குறித்து விளக்கப்பட்டது.
ஆஃப்லைனில் விளையாடுவதற்கும் ஆன்லைனில் விளையாடுவதற்கும் வித்தியாசம் உண்டு. ஆப்லைனில் விளையாடி யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. ஆன்லைன் ரம்மி தடை சட்டம் பரிசீலனையில் இருப்பதாகவும், இது தொடர்பாக விரைந்து முடிவெடுப்பதாகவும் ஆளுநர் கூறியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கொண்டுவரப்பட்ட அவசர சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த திறனற்ற திமுக அரசின் சட்டத்துறை அமைச்சரான திரு ரகுபதி அவர்கள் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கொண்டுவரப்பட்ட அவசர சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என்று ஒப்புக் கொண்டுள்ளார்.
அரசாணை பிறப்பிக்காமல் அவசர சட்டம் இயற்றி என்ன பயன் என்று பாஜக முன் வைத்த கேள்வியை அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறோம். தங்கள் திறனற்ற தன்மையை மறைக்க பொய்களைப் பரப்பி மாண்புமிகு தமிழக ஆளுநரின் மேல் பழியை போட்டுக் கொண்டிருந்த திமுகவினர் வெட்கி தலை குனிய வேண்டும்.
ஆளும் திமுக அரசின் திறனின்மை மற்றும் மெத்தன போக்கினால் அவசர சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் எட்டு உயிர்கள் பலியானதற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஆளும் @arivalayam அரசின் திறனின்மை மற்றும் மெத்தன போக்கினால் அவசர சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் எட்டு உயிர்கள் பலியானதற்கு @CMOTamilnadu பொறுப்பேற்க வேண்டும். (3/3)
— K.Annamalai (@annamalai_k) December 1, 2022