சென்னை:திமுக மூத்த தலைவரும்,முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும்,முன்னாள் மின்சாரத் துறை அமைச்சருமான ஆற்காடு என்.வீராசாமி அவர்கள்,திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு இடுப்பு எழும்பு முறிவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்கிடையில், வீட்டில் தவறி விழுந்து கால் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இவர் திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்ட காரணத்தால்,திமுகவின் தொடக்கக் காலம் முதல் கட்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றார்.அந்த வகையில்,திமுக முன்னாள் பொருளாளராக 1994 முதல் 2008 வரை பணியாற்றியுள்ளார்.அதன்பின்னர்,தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சி துணை தலைவராக 2001 முதல் 2006 வரை பணியாற்றியுள்ளார்.மேலும், மூன்று முறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.
இதனையடுத்து,உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தால் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்ற தேர்தலில் இவர் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…